நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினமும் (21) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் சில கிழக்கு மாவட்டங்களிலும் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினமும் (21) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதனைத் தவிர, ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் சில கிழக்கு மாவட்டங்களிலும் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இதற்கிடையில், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.