காலி பகுதியில் அமைந்துள்ள முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபருக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் அதிபர் உட்பட மூவர் காயமடைந்து காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முறையாக நடைபெறாமை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்காமை மற்றும் தற்போதைய கல்வி முறையில் சீர்திருத்தம் கோரி பெற்றோர் தரப்பினர் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் திகதி பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த பின்னர், இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபருடன் பெற்றோர் நடத்திய பேச்சுவார்த்தை தீவிரமடைந்து, பின்னர் அது கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிபர் மற்றும் ஏனைய இருவரின் நிலைமை பாரதூரமானதல்ல என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக காலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச பாடசாலை விளையாட்டுப் போட்டியில் பெற்றோர்–அதிபர் மோதல் காலி பகுதியில் அமைந்துள்ள முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபருக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் அதிபர் உட்பட மூவர் காயமடைந்து காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முறையாக நடைபெறாமை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்காமை மற்றும் தற்போதைய கல்வி முறையில் சீர்திருத்தம் கோரி பெற்றோர் தரப்பினர் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் திகதி பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த பின்னர், இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபருடன் பெற்றோர் நடத்திய பேச்சுவார்த்தை தீவிரமடைந்து, பின்னர் அது கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிபர் மற்றும் ஏனைய இருவரின் நிலைமை பாரதூரமானதல்ல என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக காலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.