• Dec 14 2024

பெண்களையே அதிகம் பாதிக்கும் தைராய்டு -மருத்துவர்கள் எச்சரிக்கை!

Tamil nila / Aug 22nd 2024, 8:48 pm
image

தைராய்டு நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தைராய்டு என்பது கழுத்தில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி தைராய்டு நோயால் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோய் ஏற்பட்டால் சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது குறைப்பு, முடி உதிர்தல், வறண்ட சருமம் மற்றும் மனநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல அறிகுறிகள் தோன்றும்.

இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தைராய்டு பிரச்சனை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களில் பத்து சதவிகிதம் பேருக்கு ஆட்டோ இம்யூன் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குளிர்பானங்கள் குடிப்பதால் தைராய்டு வராது. ஆனால் குளிர் பானங்களில் லித்தியம் அதிகமாக இருந்தால் தைராய்டு வர வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைமுறை மாற்றங்கள், கடுமையான புகைப்பிடித்தல் மற்றும் அதிக அளவு மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துதல் போன்ற காரணங்களாலும் தைராய்டு ஏற்படும்.

அயோடின் சத்து குறைவாக உள்ள உப்பை எடுத்துக் கொள்வது தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால்தான் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. 


பெண்களையே அதிகம் பாதிக்கும் தைராய்டு -மருத்துவர்கள் எச்சரிக்கை தைராய்டு நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தைராய்டு என்பது கழுத்தில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது.இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி தைராய்டு நோயால் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோய் ஏற்பட்டால் சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது குறைப்பு, முடி உதிர்தல், வறண்ட சருமம் மற்றும் மனநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல அறிகுறிகள் தோன்றும்.இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தைராய்டு பிரச்சனை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களில் பத்து சதவிகிதம் பேருக்கு ஆட்டோ இம்யூன் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.குளிர்பானங்கள் குடிப்பதால் தைராய்டு வராது. ஆனால் குளிர் பானங்களில் லித்தியம் அதிகமாக இருந்தால் தைராய்டு வர வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைமுறை மாற்றங்கள், கடுமையான புகைப்பிடித்தல் மற்றும் அதிக அளவு மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துதல் போன்ற காரணங்களாலும் தைராய்டு ஏற்படும்.அயோடின் சத்து குறைவாக உள்ள உப்பை எடுத்துக் கொள்வது தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால்தான் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement