• Oct 19 2024

QR முறைமையாக மாற்றப்படும் பயணச்சீட்டுகள் - டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து துறை! samugammedia

Chithra / May 16th 2023, 9:19 am
image

Advertisement

பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் பயணச்சீட்டு மற்றும் தொடரூந்து பயணச்சீட்டு என்பன கியூ.ஆர். முறைமையாக மாற்றப்படவுள்ளதாகவும் அதனூடாக வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறிள்ளார்.

அத்துடன் முடியுமான அளவு விரைவாக டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு, தவறிழைக்கும் சாரதிகளுக்கு மதிப்பெண் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

QR முறைமையாக மாற்றப்படும் பயணச்சீட்டுகள் - டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து துறை samugammedia பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் பயணச்சீட்டு மற்றும் தொடரூந்து பயணச்சீட்டு என்பன கியூ.ஆர். முறைமையாக மாற்றப்படவுள்ளதாகவும் அதனூடாக வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறிள்ளார்.அத்துடன் முடியுமான அளவு விரைவாக டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு, தவறிழைக்கும் சாரதிகளுக்கு மதிப்பெண் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement