• Mar 21 2025

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்: யாழில் மடக்கிப் பிடித்த பொலிஸார்..!

Sharmi / Mar 20th 2025, 8:33 am
image

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் வழிமறித்தவேளை குறித்த டிப்பர் நிற்காமல் சென்றது. 

இதன்போது சாவகச்சேரி பொலிஸார் வேகத்தடையை வீதியில் போட்டவேளை டிப்பரின் சக்கரங்கள் காற்றுப் போனது.

இந்நிலையில் டிப்பரை நிறுத்திவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார். 

பின்னர் சாவகச்சேரி பொலிஸார் டிப்பரை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்: யாழில் மடக்கிப் பிடித்த பொலிஸார். அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்றிரவு 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் வழிமறித்தவேளை குறித்த டிப்பர் நிற்காமல் சென்றது. இதன்போது சாவகச்சேரி பொலிஸார் வேகத்தடையை வீதியில் போட்டவேளை டிப்பரின் சக்கரங்கள் காற்றுப் போனது.இந்நிலையில் டிப்பரை நிறுத்திவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார். பின்னர் சாவகச்சேரி பொலிஸார் டிப்பரை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement