• Mar 20 2025

முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு பழிவாங்கப்பட்ட ஜோசப் ஸ்டாலின் - ரோஹித்த பகிரங்கம்

Chithra / Mar 20th 2025, 8:37 am
image


எமது அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினுக்கு  நீதிமன்றம் பிணை வழங்கியது. இருப்பினும்  பழிவாங்குவதற்காக அரசாங்கம் அவரை முல்லைத்தீவுக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தியது. இறுதியில் எமது அரசாங்கம் இல்லாமல் போனது என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது பால்மா பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமானது. பால்மா விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது, அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது  இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் தான் வீதிக்கு இறங்கி போராடினார்கள். எமது அரசாங்கத்தை  வீழ்த்தி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

யார் ஆட்சியில் இருப்பது என்று மக்கள் பார்ப்பதில்லை. தான்  சிறந்த முறையில் வாழ வேண்டும் என்றே மக்கள் கருதுவார்கள். 

அரிசியின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எமது அரசாங்கத்தில்  கொத்தலாவெல  பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின்  போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. 

இருப்பினும்  பழிவாங்கும் நோக்கத்தில் அவரை எமது அரசாங்கம் முல்லைத்தீவு பகுதிக்கு தனிமைப்படுத்தலுக்காக கொண்டு சென்றது. இதனால் எமது அரசாங்கமும் இல்லாமல் போனது.

வேலையில்லா பட்டதாரிகளில் பெரும்பாலானோர் இந்த அரசாங்கத்துக்கு  வாக்களித்தார்கள். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக தொழில் வாய்ப்புக்களை வழங்குங்கள்.

பட்டதாரிகளின் போராட்டத்தை தடுப்பதற்கு   நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என்றார்.

முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு பழிவாங்கப்பட்ட ஜோசப் ஸ்டாலின் - ரோஹித்த பகிரங்கம் எமது அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினுக்கு  நீதிமன்றம் பிணை வழங்கியது. இருப்பினும்  பழிவாங்குவதற்காக அரசாங்கம் அவரை முல்லைத்தீவுக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தியது. இறுதியில் எமது அரசாங்கம் இல்லாமல் போனது என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது பால்மா பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமானது. பால்மா விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது, அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது  இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் தான் வீதிக்கு இறங்கி போராடினார்கள். எமது அரசாங்கத்தை  வீழ்த்தி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை கொண்டு வந்துள்ளார்கள்.யார் ஆட்சியில் இருப்பது என்று மக்கள் பார்ப்பதில்லை. தான்  சிறந்த முறையில் வாழ வேண்டும் என்றே மக்கள் கருதுவார்கள். அரிசியின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.எமது அரசாங்கத்தில்  கொத்தலாவெல  பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின்  போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. இருப்பினும்  பழிவாங்கும் நோக்கத்தில் அவரை எமது அரசாங்கம் முல்லைத்தீவு பகுதிக்கு தனிமைப்படுத்தலுக்காக கொண்டு சென்றது. இதனால் எமது அரசாங்கமும் இல்லாமல் போனது.வேலையில்லா பட்டதாரிகளில் பெரும்பாலானோர் இந்த அரசாங்கத்துக்கு  வாக்களித்தார்கள். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக தொழில் வாய்ப்புக்களை வழங்குங்கள்.பட்டதாரிகளின் போராட்டத்தை தடுப்பதற்கு   நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement