• Apr 25 2026

கிளிநொச்சியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய டிப்பர் சாரதிகள் கைது...!

Ziya / May 7th 2024, 12:00 pm
image

கிளிநொச்சியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றைய தினம்(06)  பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது..

அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிப் பயணித்த ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை  பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மணல் மற்றும் வாகனம் ஆகியவற்றை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய டிப்பர் சாரதிகள் கைது. கிளிநொச்சியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றைய தினம்(06)  பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிப் பயணித்த ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை  பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மணல் மற்றும் வாகனம் ஆகியவற்றை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement