• Nov 26 2024

கிளிநொச்சியில் பொலிஸாரிடம் சிக்கி டிப்பர்கள்...! நடந்தது என்ன?

Sharmi / Jul 6th 2024, 12:46 pm
image

கிளிநொச்சியில் மணல் அகழ்விற்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய நான்கு டிப்பர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு நேற்றையதினம்(05)  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடயப் பொருட்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் போலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சியில் பொலிஸாரிடம் சிக்கி டிப்பர்கள். நடந்தது என்ன கிளிநொச்சியில் மணல் அகழ்விற்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய நான்கு டிப்பர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு நேற்றையதினம்(05)  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.தருமபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடயப் பொருட்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் போலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement