கிண்ணியா பிரதேசத்துக்கு நிரந்தர காதி நீதவான் ஒருவரை நியமிக்கக் கோரி, ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தினால் நேற்று(16) இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.சபருள்ளாகானால், ஒப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கடந்த 2023 ஆண்டு நவம்பர் மாதம் கிண்ணியா உட்பட, நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள காதி நீதிமன்றங்களில், நிழவும் காதி நீதிபதிகள் வெற்றிடங்களுக்காக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஒரு வருடத்தைக் கடந்துள்ளபோதிலும், நியமனங்களை வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமையினால், கிண்ணியா பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குடிமக்கள் வாழும் கிண்ணியா காதி நீதிமன்றப் பிரிவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
கிண்ணியா பிரிவுக்கு பதில் காதி நீதவான் ஒருவர் நியமிக்கப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றபோதிலும், மக்களுக்கான சேவைகள் மாதத்தில் இரு நாட்கள் மட்டுமே நடைபெறுவதனால், வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
மேலும், அதிகப்படியான வழக்குகளைக் கொண்ட, கிண்ணியா காதி நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மிக மந்தகதியிலேயே நடை பெற்று வருவதனால், தூர இடங்களில் இருந்து வருகின்றவர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது விடயாமாக, பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், இதுவரை நிரந்தர காதி நீதவான் ஒருவரை நியமிப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே, மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, நிரந்த காதி நீதவானை ஒருவரி நியமிக்க, துரித நடவடிக்கை எடுக்குமாறு, தங்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என்றும், அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் நிரந்தர காதி நீதவான் ஒருவரை நியமிக்குமாறு - ஜனாதிபதிக்கு மகஜர் கிண்ணியா பிரதேசத்துக்கு நிரந்தர காதி நீதவான் ஒருவரை நியமிக்கக் கோரி, ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கிண்ணியா சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தினால் நேற்று(16) இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.சபருள்ளாகானால், ஒப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கடந்த 2023 ஆண்டு நவம்பர் மாதம் கிண்ணியா உட்பட, நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள காதி நீதிமன்றங்களில், நிழவும் காதி நீதிபதிகள் வெற்றிடங்களுக்காக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஒரு வருடத்தைக் கடந்துள்ளபோதிலும், நியமனங்களை வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமையினால், கிண்ணியா பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குடிமக்கள் வாழும் கிண்ணியா காதி நீதிமன்றப் பிரிவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.கிண்ணியா பிரிவுக்கு பதில் காதி நீதவான் ஒருவர் நியமிக்கப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றபோதிலும், மக்களுக்கான சேவைகள் மாதத்தில் இரு நாட்கள் மட்டுமே நடைபெறுவதனால், வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.மேலும், அதிகப்படியான வழக்குகளைக் கொண்ட, கிண்ணியா காதி நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மிக மந்தகதியிலேயே நடை பெற்று வருவதனால், தூர இடங்களில் இருந்து வருகின்றவர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது விடயாமாக, பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், இதுவரை நிரந்தர காதி நீதவான் ஒருவரை நியமிப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.எனவே, மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, நிரந்த காதி நீதவானை ஒருவரி நியமிக்க, துரித நடவடிக்கை எடுக்குமாறு, தங்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என்றும், அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.