தேசிய மக்கள் சக்தியிலிருந்து, முஸ்லிம்களை பிரிப்பதற்கு, பல்வேறு சதிகளை அரங்கேற்றி.
இனவாத அரசியலை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்குவதற்கு தோல்வி அடைந்தவர்கள் முயற்சி செய்து வருவதாக எந்தன் நத்தி தெரிவித்தார்.
திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (01) இரவு நடைபெற்ற, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர், அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டு, எங்களுடைய கட்சியை சேர்ந்த சரோஜா போல்ராஜ் சகோதரி வெளியிட்ட, ஒரு சிறிய விடயத்தை, சில ஊடகங்கள் இன்று தூக்கிப் பிடித்துக் கொண்டு, அவற்றை பெரிய பூதாகரமாக காட்டி, முஸ்லிம்களை திசை திருப்ப அபார முயற்சி செய்கின்றன.
ஆனாலும் எங்களுடைய ஆட்சியில், அபார நம்பிக்கை வைத்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களை இன வாதங்களையும் மத வாதங்களையும் கூறி, திசை திருப்ப முடியாது என்பதை எதிர்வரும் பொதுத்தேர்தல் முடிவுகள் நிச்சயம் நிரூபிக்கும்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு, அனைத்து இன மக்களும் அரச தீர்மானங்களிலும், அரச நிர்வாக நடவடிக்கைகளிலும் பங்குபற்றுவது அவசியமாகும்.அப்போதுதான் அனைத்து இன மக்களும் இலங்கையரே என்ற பண்பாடு உருவாகும்.
தற்போதைய புதிய ஆட்சியில், நாங்கள் ஊடகங்களை அழைத்து பொய்களை கூறி, மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை செய்யவில்லை. இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மக்களாட்சி சுமுகமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சட்டம் எல்லோருக்கும் சமன் என்ற ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது காலம் வரைக்கும் அதிகாரத்தின் கீழ் இருந்து வந்தவர்கள், தேர்தல் என்றால் அரச வாகனங்களையும், அரச ஊழியர்களையும் பயன்படுத்துவதையே வழக்கமான கொண்டிருந்தனர். எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தல்தான் இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஜனநாயக முறையில் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக அமையப் போகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களில், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தியின் மூலம் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இனவாத அரசியலை நாட்டில் மீண்டும் உருவாக்குவதற்கு : தோல்வி அடைந்தவர்கள் பல்வேறு சதிகளை உருவாக்குகின்றனர் - சுனில் ஹந்துன்னெத்தி தேசிய மக்கள் சக்தியிலிருந்து, முஸ்லிம்களை பிரிப்பதற்கு, பல்வேறு சதிகளை அரங்கேற்றி. இனவாத அரசியலை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்குவதற்கு தோல்வி அடைந்தவர்கள் முயற்சி செய்து வருவதாக எந்தன் நத்தி தெரிவித்தார்.திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (01) இரவு நடைபெற்ற, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர், அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,2019 ஆம் ஆண்டு, எங்களுடைய கட்சியை சேர்ந்த சரோஜா போல்ராஜ் சகோதரி வெளியிட்ட, ஒரு சிறிய விடயத்தை, சில ஊடகங்கள் இன்று தூக்கிப் பிடித்துக் கொண்டு, அவற்றை பெரிய பூதாகரமாக காட்டி, முஸ்லிம்களை திசை திருப்ப அபார முயற்சி செய்கின்றன. ஆனாலும் எங்களுடைய ஆட்சியில், அபார நம்பிக்கை வைத்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களை இன வாதங்களையும் மத வாதங்களையும் கூறி, திசை திருப்ப முடியாது என்பதை எதிர்வரும் பொதுத்தேர்தல் முடிவுகள் நிச்சயம் நிரூபிக்கும்.இலங்கையின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு, அனைத்து இன மக்களும் அரச தீர்மானங்களிலும், அரச நிர்வாக நடவடிக்கைகளிலும் பங்குபற்றுவது அவசியமாகும்.அப்போதுதான் அனைத்து இன மக்களும் இலங்கையரே என்ற பண்பாடு உருவாகும்.தற்போதைய புதிய ஆட்சியில், நாங்கள் ஊடகங்களை அழைத்து பொய்களை கூறி, மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை செய்யவில்லை. இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மக்களாட்சி சுமுகமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சட்டம் எல்லோருக்கும் சமன் என்ற ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இது காலம் வரைக்கும் அதிகாரத்தின் கீழ் இருந்து வந்தவர்கள், தேர்தல் என்றால் அரச வாகனங்களையும், அரச ஊழியர்களையும் பயன்படுத்துவதையே வழக்கமான கொண்டிருந்தனர். எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தல்தான் இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஜனநாயக முறையில் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக அமையப் போகின்றது.திருகோணமலை மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களில், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தியின் மூலம் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.