• May 03 2024

மனித உடல்களை அடக்கம் செய்வதற்கும் வரி அறவிடுவது எந்தளவுக்கு நியாயம்..? - சஜித் பகிரங்க கேள்வி

Chithra / Dec 11th 2023, 10:03 am
image

Advertisement

இலங்கையின்  வங்குரோத்து நிலைக்குக் காரணமான ஊழல்வாதிகளின் செல்வங்களை இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்நாட்டில் பெறுமதி சேர் வரியை அதிகரிப்பது நியாயமற்றது.

செயல்திறனற்ற மூலதன முகாமைத்துவத்தால் உருவாக்கிக்கொண்ட வரிக் கொள்கை ஊடாக,இந்நாட்டில் பெரும் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் "பரேட்" சட்டத்தின் ஊடாக சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஊழல் புரிவோருக்கு கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பரேட் சட்டத்தினால் இலங்கையில் வங்கிகள் நன்மை அடைந்தாலும்,நுண்,சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையாளர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை.

வரலாற்றில் முதல் தடவையாக நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளுப்பட வரிச்சலுகை வழங்கியமையே காரணம்.

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு  நிதியமைச்சரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தேன்.

ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.


மனித உடல்களை அடக்கம் செய்வதற்கும் வரி அறவிடுவது எந்தளவுக்கு நியாயம். - சஜித் பகிரங்க கேள்வி இலங்கையின்  வங்குரோத்து நிலைக்குக் காரணமான ஊழல்வாதிகளின் செல்வங்களை இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.“இந்நாட்டில் பெறுமதி சேர் வரியை அதிகரிப்பது நியாயமற்றது.செயல்திறனற்ற மூலதன முகாமைத்துவத்தால் உருவாக்கிக்கொண்ட வரிக் கொள்கை ஊடாக,இந்நாட்டில் பெரும் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது.இலங்கையின் "பரேட்" சட்டத்தின் ஊடாக சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஊழல் புரிவோருக்கு கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.பரேட் சட்டத்தினால் இலங்கையில் வங்கிகள் நன்மை அடைந்தாலும்,நுண்,சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையாளர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை.வரலாற்றில் முதல் தடவையாக நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளுப்பட வரிச்சலுகை வழங்கியமையே காரணம்.அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு  நிதியமைச்சரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தேன்.ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement