திருகோணமலை - மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று வியாழக்கிழமை (09) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமது வேலைகளை விட்டுவிட்டு, பிரயாண கஷ்டங்களுக்கு மத்தியில் வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்தால் இங்கு வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தாம் அசௌரியங்களை எதிர்நோக்கியதாக வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே இது விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர் .
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8:00 மணி முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகிறது.
இன்று 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் வைத்தியர்கள் - நோயாளிகள் பெரும் அவதி திருகோணமலை - மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று வியாழக்கிழமை (09) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.தமது வேலைகளை விட்டுவிட்டு, பிரயாண கஷ்டங்களுக்கு மத்தியில் வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்தால் இங்கு வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக தாம் அசௌரியங்களை எதிர்நோக்கியதாக வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் கவலை தெரிவித்தனர்.எனவே இது விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர் .அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8:00 மணி முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகிறது.