• Nov 23 2024

கொட்டித் தீர்க்கும் கனமழை...!வெள்ள நீரில் மூழ்கிய வெருகல்...!இடம்பெயர்ந்த மக்கள்...!samugammedia

Sharmi / Jan 1st 2024, 12:35 pm
image

நேற்று இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதுடன் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

மழை காரணத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை,வட்டவன், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள  46 குடும்பங்களைச் சேர்ந்த 137 நபர்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை வெருகலம்பதி மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகமான வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதோடு வயல் வெளிகளும் நீரில் மூழ்கியுள்ளன

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து 2 அடியில் வெள்ளநீர் செல்வதால் இவ் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதை காணமுடிந்தது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் வாகனங்களை பாதுகாப்பாக அனுப்பி வருவதையும் காணமுடிந்தது.

அத்தோடு வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் வெள்ள நிலைமைகளை பார்வையிட்டதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. 



கொட்டித் தீர்க்கும் கனமழை.வெள்ள நீரில் மூழ்கிய வெருகல்.இடம்பெயர்ந்த மக்கள்.samugammedia நேற்று இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதுடன் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.மழை காரணத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை,வட்டவன், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள  46 குடும்பங்களைச் சேர்ந்த 137 நபர்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை வெருகலம்பதி மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அதிகமான வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதோடு வயல் வெளிகளும் நீரில் மூழ்கியுள்ளனதிருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து 2 அடியில் வெள்ளநீர் செல்வதால் இவ் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதை காணமுடிந்தது.வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் வாகனங்களை பாதுகாப்பாக அனுப்பி வருவதையும் காணமுடிந்தது. அத்தோடு வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் வெள்ள நிலைமைகளை பார்வையிட்டதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. 

Advertisement

Advertisement

Advertisement