சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று (10) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபாய் நிதி, அதன் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 ரி-சேர்ட்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
வழக்கின் முதலாவது சந்தேகநபரான பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ஏற்கனவே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதற்கான அவசியம் இல்லை என நீதவான் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலாக, தேவையெனில் சர்வதேச பிடியாணை பெறுவதற்கான சத்தியக்கடதாசியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இதனிடையே, வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் தலைவர் பாஸ்வர் குணவர்தன, தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்படுவதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா நிதி முறைகேடு வழக்கு: பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை நீதவான் அறிவிப்பு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு நேற்று (10) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.கடந்த 2014 ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபாய் நிதி, அதன் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 ரி-சேர்ட்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.வழக்கின் முதலாவது சந்தேகநபரான பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ஏற்கனவே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதற்கான அவசியம் இல்லை என நீதவான் சுட்டிக்காட்டினார்.அதற்கு பதிலாக, தேவையெனில் சர்வதேச பிடியாணை பெறுவதற்கான சத்தியக்கடதாசியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.இதனிடையே, வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் தலைவர் பாஸ்வர் குணவர்தன, தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்படுவதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.