கடந்த வருடம் நாட்டில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் முதல் இலங்கையை நோக்கி ஏராளமான நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் ஆண்டின் இறுதிவார விடுமுறைகள் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு தற்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளதுடன் குறிப்பாக சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் 250,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவற்றுள் அதிகளவானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சிகிரியாவை யார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் 30 அமெரிக்க டொலர் பயணச்சீட்டுகளின் ஊடாக 225,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திடீரென சிகிரியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள். வெளியான காரணம். samugammedia கடந்த வருடம் நாட்டில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவடைந்து காணப்பட்டது.இந்நிலையில் இந்த வருடம் முதல் இலங்கையை நோக்கி ஏராளமான நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில் ஆண்டின் இறுதிவார விடுமுறைகள் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு தற்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளதுடன் குறிப்பாக சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்டம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் 250,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவற்றுள் அதிகளவானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை சிகிரியாவை யார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் 30 அமெரிக்க டொலர் பயணச்சீட்டுகளின் ஊடாக 225,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.