• Apr 02 2025

வைத்தியராக நடித்து பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய இரு நைஜீரியப் பிரஜைகளுக்கு ஏற்பட்ட நிலை

Chithra / Dec 30th 2023, 9:19 am
image

 

வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய இரு நைஜீரியப் பிரஜைகளை கணினி குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்து இருவரும் 3 பெண்களிடமும் பல இலட்சம் ரூபாக்களை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே நைஜீரியப் பிரஜை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் வைத்தியர்கள் போல் நடித்து சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பண மோசடி செய்துள்ளனர்.

மேலும் கார் ஒன்றை வென்றுள்ளதாகவும் அந்தக் காரின் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இந்த நைஜீரியப் பிரஜைகள் மற்றொரு பெண்ணிடம் பண மோசடி செய்துள்ளனர். 

இந்த மோசடிகள் வெவ்வேறு 3 சம்பவங்களில் இடம்பெற்றுள்ளன.

சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படும் போது அவர்களிடமிருந்து 14 ஏடிஎம் கார்ட்கள் மற்றும் 6 கையடக்கத் தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியராக நடித்து பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய இரு நைஜீரியப் பிரஜைகளுக்கு ஏற்பட்ட நிலை  வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய இரு நைஜீரியப் பிரஜைகளை கணினி குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.குறித்து இருவரும் 3 பெண்களிடமும் பல இலட்சம் ரூபாக்களை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே நைஜீரியப் பிரஜை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் வைத்தியர்கள் போல் நடித்து சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பண மோசடி செய்துள்ளனர்.மேலும் கார் ஒன்றை வென்றுள்ளதாகவும் அந்தக் காரின் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இந்த நைஜீரியப் பிரஜைகள் மற்றொரு பெண்ணிடம் பண மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிகள் வெவ்வேறு 3 சம்பவங்களில் இடம்பெற்றுள்ளன.சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படும் போது அவர்களிடமிருந்து 14 ஏடிஎம் கார்ட்கள் மற்றும் 6 கையடக்கத் தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement