ஜோசப்பரராஜசிங்கம் படு கொலை தொடர்பில் தமது கட்சிக்கு எந்த வித தொடர்பும் இல்லை - தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு...!samugammedia
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலையில் தமது கட்சியின் தலைவரின் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 25ஆம் திகதி மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜோசப்பரராஜசிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் தமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தொடர்பில் தெரிவித்த கருத்துகளுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
இலங்கை தமிழரசுக்கட்சியானது தொடர்ச்சியாக தமது கட்சியின் தலைவர் மீது சேறுபூசும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றது.எங்களது கட்சியைபற்றி பேசுவதற்கு தமிழரசுக்கட்சிக்கு எந்த அருகதையும் இல்லை.அவர்களின் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கும்போது அதனை தீர்க்க வக்கற்றவர்கள் தமது கட்சியையும் கட்சி தலைவரையும் விமர்சித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் தமது தலைவருக்கும் கட்சிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடுவோருக்கு எதிராக எதிர்வரும் காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோசப்பரராஜசிங்கம் படு கொலை தொடர்பில் தமது கட்சிக்கு எந்த வித தொடர்பும் இல்லை - தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு.samugammedia முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலையில் தமது கட்சியின் தலைவரின் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 25ஆம் திகதி மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜோசப்பரராஜசிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் தமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தொடர்பில் தெரிவித்த கருத்துகளுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.இலங்கை தமிழரசுக்கட்சியானது தொடர்ச்சியாக தமது கட்சியின் தலைவர் மீது சேறுபூசும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றது.எங்களது கட்சியைபற்றி பேசுவதற்கு தமிழரசுக்கட்சிக்கு எந்த அருகதையும் இல்லை.அவர்களின் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கும்போது அதனை தீர்க்க வக்கற்றவர்கள் தமது கட்சியையும் கட்சி தலைவரையும் விமர்சித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் தமது தலைவருக்கும் கட்சிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடுவோருக்கு எதிராக எதிர்வரும் காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.