• May 30 2026

பதுளையில் நடந்த பாரம்பரிய சடங்கு -திரண்டு சென்ற மக்கள்

Ziya / Apr 15th 2026, 5:15 pm
image

புதுவருட பாரம்பரிய மரபுகளையும் ஆரோக்கிய நலன்களையும் இணைக்கும் வகையில் “தலைக்கு எண்ணெய் பூசும்” நிகழ்வு பதுளையில் சிறப்பாக நடைபெற்றது.


ஊவா மாகாண கலாசார பிரிவும் மாகாண ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, பதுளை முதியங்கனை ராஜமஹா விகாரையில் ஆன்மீக மரியாதையுடன் நடைபெற்றது.   


முதியங்கன ரஜமஹா விகாரையின் வணக்கத்திற்குரிய முருந்தெனிய தர்மரத்ன தேரரின் வழிகாட்டுதலின்படி, இன்று (15) அதிகாலை 6.54 மணியளவில் சுப நேரத்தில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர, தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன, இளைஞர் விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் தினிது சமன் ஹென்னாயக்க, பதுளை நகர மேயர் நந்தன ஹபுகொட உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும், அரச அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


பௌத்த கலாசாரத்தில் முக்கிய இடம்பெறும் தலைக்கு எண்ணெய் பூசும் சடங்கு, உடல் நலத்தையும் மன அமைதியையும் வழங்கும் ஒரு பாரம்பரிய மரபாகக் கருதப்படுகிறது. 


இந்நிகழ்வு, அந்த மரபை புதுப்பித்து சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.

பதுளையில் நடந்த பாரம்பரிய சடங்கு -திரண்டு சென்ற மக்கள் புதுவருட பாரம்பரிய மரபுகளையும் ஆரோக்கிய நலன்களையும் இணைக்கும் வகையில் “தலைக்கு எண்ணெய் பூசும்” நிகழ்வு பதுளையில் சிறப்பாக நடைபெற்றது.ஊவா மாகாண கலாசார பிரிவும் மாகாண ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, பதுளை முதியங்கனை ராஜமஹா விகாரையில் ஆன்மீக மரியாதையுடன் நடைபெற்றது.   முதியங்கன ரஜமஹா விகாரையின் வணக்கத்திற்குரிய முருந்தெனிய தர்மரத்ன தேரரின் வழிகாட்டுதலின்படி, இன்று (15) அதிகாலை 6.54 மணியளவில் சுப நேரத்தில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர, தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன, இளைஞர் விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் தினிது சமன் ஹென்னாயக்க, பதுளை நகர மேயர் நந்தன ஹபுகொட உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும், அரச அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.பௌத்த கலாசாரத்தில் முக்கிய இடம்பெறும் தலைக்கு எண்ணெய் பூசும் சடங்கு, உடல் நலத்தையும் மன அமைதியையும் வழங்கும் ஒரு பாரம்பரிய மரபாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு, அந்த மரபை புதுப்பித்து சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement