• Mar 28 2026

தம்பலகாம விவசாயிகளால் பாரம்பரிய நெற் செய்கைக்கான பாரம்பரிய நீர் திறப்பு விழா நிகழ்வு!

Ziya / Mar 27th 2026, 3:56 pm
image

திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட ஒன்றினைந்த விவசாய சம்மேளனங்கள் இணைந்து பாரம்பரிய முறையிலாக விசேட பூஜை வழிபாட்டுடன் நீர் திறப்பு விழா நிகழ்வை இன்று (27) நடாத்தினர்.


தம்பலகாமம் ஆதிகோனேஸ்வரா ஆலயத்தை அண்டிய வயல் நிலப் பகுதியில் குறித்த பாரம்பரின நீர் திறப்பு விழா இடம் பெற்றது.


சிறுபோக நெற்செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில் விசேட பூஜை வழிபாட்டுடன் குறித்த நிகழ்வினை விவசாயிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.


விவசாய செய்கையின் போது பாரம்பரிய முறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் விவசாய சங்கங்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்து வருகின்றன. 


இதில் தம்பலகாமம் கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள்,நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள்,கமநல சேவை காப்புறு அதிகார சபை அதிகாரிகள் ,மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்

தம்பலகாம விவசாயிகளால் பாரம்பரிய நெற் செய்கைக்கான பாரம்பரிய நீர் திறப்பு விழா நிகழ்வு திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட ஒன்றினைந்த விவசாய சம்மேளனங்கள் இணைந்து பாரம்பரிய முறையிலாக விசேட பூஜை வழிபாட்டுடன் நீர் திறப்பு விழா நிகழ்வை இன்று (27) நடாத்தினர்.தம்பலகாமம் ஆதிகோனேஸ்வரா ஆலயத்தை அண்டிய வயல் நிலப் பகுதியில் குறித்த பாரம்பரின நீர் திறப்பு விழா இடம் பெற்றது.சிறுபோக நெற்செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில் விசேட பூஜை வழிபாட்டுடன் குறித்த நிகழ்வினை விவசாயிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.விவசாய செய்கையின் போது பாரம்பரிய முறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் விவசாய சங்கங்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்து வருகின்றன. இதில் தம்பலகாமம் கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள்,நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள்,கமநல சேவை காப்புறு அதிகார சபை அதிகாரிகள் ,மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement