• Feb 14 2026

கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு!

shanuja / Nov 3rd 2025, 9:20 pm
image

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது. 


மத்திய அதிவேக வீதி திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் காரணமாக, கொழும்பு - கண்டி பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கடவத்தை பண்டாரவத்தை பகுதியில் கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடாக இரண்டு கட்டங்களில் 2025.11.01 முதல் 2026.01.31ஆம் திகதி வரை பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 


இதன்படி முதல் கட்டமாக, கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் வீதியின் இரு மருங்குகளை கொண்ட வீதியில் ஒரு மருங்கு மூடப்படும். 


அதன் பின்னர், இரண்டாம் கட்டத்தின் கீழ், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் அந்தப் பக்கத்திலும் ஒரு மருங்கு மூடப்படவுள்ளது. 


குறித்த காலப்பகுதியில் வாகன நெரிசல் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


எனவே, இந்த நாட்களில் கொழும்பு - கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் முடிந்தவரை கடவத்தை வெளிப்புற சுற்றுவட்ட வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது. மத்திய அதிவேக வீதி திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் காரணமாக, கொழும்பு - கண்டி பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடவத்தை பண்டாரவத்தை பகுதியில் கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடாக இரண்டு கட்டங்களில் 2025.11.01 முதல் 2026.01.31ஆம் திகதி வரை பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக, கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் வீதியின் இரு மருங்குகளை கொண்ட வீதியில் ஒரு மருங்கு மூடப்படும். அதன் பின்னர், இரண்டாம் கட்டத்தின் கீழ், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் அந்தப் பக்கத்திலும் ஒரு மருங்கு மூடப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் வாகன நெரிசல் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த நாட்களில் கொழும்பு - கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் முடிந்தவரை கடவத்தை வெளிப்புற சுற்றுவட்ட வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement