• Apr 15 2026

வவுனியாவில் திடீரென திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளால் விபரீதம்; நொறுங்கிய முச்சக்கரவண்டி

Chithra / Mar 18th 2026, 8:33 pm
image

 

வவுனியா - பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  


குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,


வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி, அதேதிசையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது. 


விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திரும்ப முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.


விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.


விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 


வவுனியாவில் திடீரென திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளால் விபரீதம்; நொறுங்கிய முச்சக்கரவண்டி  வவுனியா - பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி, அதேதிசையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திரும்ப முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement