சுவிட்சர்லாந்து ரீம்ப்பிஷ்ஹார்ன் பனிசிகரத்தில் நடத்தப்பட்ட பனிச்சறுக்கு போட்டியில் சிக்கி வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலை அமைந்துள்ளது.
ஆண்டின் அனைத்து நாட்களில் பனிபொழியும் அந்த நகரில் பனிச்சறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு குவிகின்றார்கள்.
இதனால் அங்கு உயர் தரத்திலான நட்சத்திர விடுதிகள், சிறுவர் பூங்காக்கள், ரோப்கார் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள 4 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள ரீம்ப்பிஷ்ஹார்ன் பனிசிகரத்தில் பனிசறுக்கு போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர்.
பனிசறுக்கு போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு பலத்த காற்று வீசியது.
அதனை தொடர்ந்து அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி குவியல்கள் இராட்சத பந்துபோல உருண்டோடி அங்கு பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த கொடூர சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த இராணுவ வீரர்கள் அங்கு வந்து பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு போட்டியில் விபரீதம்; ஐவர் உயிரிழப்பு. சுவிட்சர்லாந்து ரீம்ப்பிஷ்ஹார்ன் பனிசிகரத்தில் நடத்தப்பட்ட பனிச்சறுக்கு போட்டியில் சிக்கி வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலை அமைந்துள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களில் பனிபொழியும் அந்த நகரில் பனிச்சறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு குவிகின்றார்கள். இதனால் அங்கு உயர் தரத்திலான நட்சத்திர விடுதிகள், சிறுவர் பூங்காக்கள், ரோப்கார் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள 4 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள ரீம்ப்பிஷ்ஹார்ன் பனிசிகரத்தில் பனிசறுக்கு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். பனிசறுக்கு போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு பலத்த காற்று வீசியது.அதனை தொடர்ந்து அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி குவியல்கள் இராட்சத பந்துபோல உருண்டோடி அங்கு பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த கொடூர சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த இராணுவ வீரர்கள் அங்கு வந்து பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.