புத்தளம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீதிக்கருகே நண்பர்களுடன் பேசிவிட்டு பெண்ணொருவர் வீதியின் மறுபுறம் பார்க்காமல் மோட்டார் சைக்கிளைச் செலுத்தினார்.
அதேநேரம் அவ்வீதி வழியே சரியான திசையில் மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.
இதன்போதே குறித்த பெண் எதிர்த்திசையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. எனினும் சிறு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
மோட்டார் சைக்கிள் இரண்டும் மோதியதில் மோட்டார் சைக்கிள் பாகங்கள் ஆங்காங்கே நொருங்கி சிதறின. விபத்தையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனே சென்று இருவரையும் மீட்டனர்.
வீதிக்கு குறுக்கே சென்ற பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்; சுக்குநூறாகிய வாகனங்கள்- விபத்தின் சிசிரிவி காட்சி புத்தளம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீதிக்கருகே நண்பர்களுடன் பேசிவிட்டு பெண்ணொருவர் வீதியின் மறுபுறம் பார்க்காமல் மோட்டார் சைக்கிளைச் செலுத்தினார். அதேநேரம் அவ்வீதி வழியே சரியான திசையில் மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தார். இதன்போதே குறித்த பெண் எதிர்த்திசையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. எனினும் சிறு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்.மோட்டார் சைக்கிள் இரண்டும் மோதியதில் மோட்டார் சைக்கிள் பாகங்கள் ஆங்காங்கே நொருங்கி சிதறின. விபத்தையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனே சென்று இருவரையும் மீட்டனர்.