• Dec 09 2024

சாரதியின் நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்- வயோதிப பெண் மரணம்..!

Sharmi / Jul 18th 2024, 9:43 am
image

வீதியில் சென்ற வயோதிப பெண்ணொருவர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றையதினம்(17) இடம்பெற்றது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ஹயஸ் ரக வாகனமொன்று திருகோணமலை- கந்தளாய் பிரதான வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய பெண் ஸ்தலத்திலேயே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கந்தளாய், கித்துழுத்து பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹயஸ் வாகன சாரதி நித்திரை மயக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


சாரதியின் நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்- வயோதிப பெண் மரணம். வீதியில் சென்ற வயோதிப பெண்ணொருவர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து நேற்றையதினம்(17) இடம்பெற்றது.விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ஹயஸ் ரக வாகனமொன்று திருகோணமலை- கந்தளாய் பிரதான வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்நிலையில் விபத்தில் சிக்கிய பெண் ஸ்தலத்திலேயே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கந்தளாய், கித்துழுத்து பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.ஹயஸ் வாகன சாரதி நித்திரை மயக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement