• Aug 01 2026

பனை வெட்டச் சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்; யாழில் குளவி கொட்டி பலி

Chithra / Jul 31st 2026, 10:15 am
image


யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.


புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த முதியவர் நேற்றுமுன்தினம் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்குள் பனை வெட்டுவதற்காக சென்றுள்ளார். இதன்போது அவரை கருக்குளவி கொட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதையடுத்து, அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

பனை வெட்டச் சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்; யாழில் குளவி கொட்டி பலி யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த முதியவர் நேற்றுமுன்தினம் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்குள் பனை வெட்டுவதற்காக சென்றுள்ளார். இதன்போது அவரை கருக்குளவி கொட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement