திருகோணமலை -குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்லிமுனை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் இன்று (10) உயிரிழந்துள்ளான்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்று வரும் குச்சவெளி -சல்லிமுனை பகுதியைச் சேர்ந்த ஐயூப்கான் இபாஸ் (16 -வயது) ஆவார்.
குச்சவெளி சல்லிமுனை பகுதியில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் அவரது வீட்டிலிருந்து தோட்ட காணிக்கு மின்சாரத்தை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு நாளும் காலையில் குறித்த மின்சாரத்தை சுவிட்ச் ஓப்பண்ணி வருகின்ற நிலையில் இன்றைய தினம் அதனை துண்டிக்காமல் மறந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் வழமை போன்று அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நிலையில் தோட்டத்திற்கு சென்ற மின்சார கம்பியில் சிக்கி தூக்கி எறியப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து சிறுவன் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
சிறுவனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டத்திற்கு இணைக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கிய சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சோகம் திருகோணமலை -குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்லிமுனை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் இன்று (10) உயிரிழந்துள்ளான்.இவ்வாறு உயிரிழந்த சிறுவன் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்று வரும் குச்சவெளி -சல்லிமுனை பகுதியைச் சேர்ந்த ஐயூப்கான் இபாஸ் (16 -வயது) ஆவார்.குச்சவெளி சல்லிமுனை பகுதியில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் அவரது வீட்டிலிருந்து தோட்ட காணிக்கு மின்சாரத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு நாளும் காலையில் குறித்த மின்சாரத்தை சுவிட்ச் ஓப்பண்ணி வருகின்ற நிலையில் இன்றைய தினம் அதனை துண்டிக்காமல் மறந்து சென்றுள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுவன் வழமை போன்று அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நிலையில் தோட்டத்திற்கு சென்ற மின்சார கம்பியில் சிக்கி தூக்கி எறியப்பட்டுள்ளார். இதனை அடுத்து சிறுவன் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. சிறுவனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.