மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் ரூ. 30 கோடி ரூபாய் மதிப்புள்ள கஜமுத்துக்கள் மீட்பில் சந்தேகநபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒரே இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டிலேயே இதுவே மிகப்பெரிய கஜமுத்துத் தொகுதி என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவரிடம் இருந்து 30 கஜமுத்துக்கள், சிறுத்தையின் தோல், யானைத் தந்தம், சிறுத்தையின் எண்ணெய், கருங்காலி மரம் மற்றும் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கணிசமாக பாதுகாக்கப்படும் தம்பு (Dambu) தாவரத்தின் பகுதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, சந்தேகநபர் யானைத் தந்தங்களைப் பயன்படுத்தி பல்வேறு கலைப் பொருட்களை தயாரித்து நீண்டகாலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வனவிலங்கு அதிகாரிகளின் பொறுப்பில் வைத்து விசாரணைகள் முடிவடைந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
30 கோடி ரூபாய் பெறுமதியான பொக்கிஷங்கள் ஒரே இடத்தில் மீட்பு. சந்தேக நபர் மடக்கி பிடிப்பு மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் ரூ. 30 கோடி ரூபாய் மதிப்புள்ள கஜமுத்துக்கள் மீட்பில் சந்தேகநபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.ஒரே இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டிலேயே இதுவே மிகப்பெரிய கஜமுத்துத் தொகுதி என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவரிடம் இருந்து 30 கஜமுத்துக்கள், சிறுத்தையின் தோல், யானைத் தந்தம், சிறுத்தையின் எண்ணெய், கருங்காலி மரம் மற்றும் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கணிசமாக பாதுகாக்கப்படும் தம்பு (Dambu) தாவரத்தின் பகுதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.விசாரணையின் போது, சந்தேகநபர் யானைத் தந்தங்களைப் பயன்படுத்தி பல்வேறு கலைப் பொருட்களை தயாரித்து நீண்டகாலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வனவிலங்கு அதிகாரிகளின் பொறுப்பில் வைத்து விசாரணைகள் முடிவடைந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.