வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ரத்மலானை சாலையில் உள்ள ஜெர்மன் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னால் நேற்று இரவு (08) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மீது சாலைப் பிரிப்புப் பகுதியில் இருந்த ஒரு மரத்தின் கிளை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மரத்தின் கிளை மோதி காரின் மேற்பகுதி மற்றும் கண்ணாடிப் பகுதி மீது முறிந்து விழுந்துள்ளது.
விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. எனினும் மூவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மரக் கிளை மோதியதால் காரின் முன்பக்கக் கண்ணாடி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தையடுத்து பொலிஸாரும் அதிகாரிகளும் மரக்கிளையை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கார் மீது முறிந்து விழுந்த மரக்கிளை; தெய்வாதீனமாக காயங்களுடன் உயிர்தப்பிய மூவர் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ரத்மலானை சாலையில் உள்ள ஜெர்மன் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னால் நேற்று இரவு (08) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மீது சாலைப் பிரிப்புப் பகுதியில் இருந்த ஒரு மரத்தின் கிளை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மரத்தின் கிளை மோதி காரின் மேற்பகுதி மற்றும் கண்ணாடிப் பகுதி மீது முறிந்து விழுந்துள்ளது. விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. எனினும் மூவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மரக் கிளை மோதியதால் காரின் முன்பக்கக் கண்ணாடி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தையடுத்து பொலிஸாரும் அதிகாரிகளும் மரக்கிளையை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.