• Nov 21 2025

வலி கண்டி கிராமத்தில் இடம்பெற்ற மரம் நடுகையும் ,கலந்துரையாடலும்

dorin / Nov 19th 2025, 9:25 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை  வலிக்கண்டி கிராமத்தில் புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதிப் பங்களிப்புடன் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் வெண்மதி சிறுவர் கழகத்தின் வேண்டு கோளுக்கு இணங்க இன்று காலை 10 மணியளவில்   மர நடுகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ் நிகழ்வின் பின்னர் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வலிககண்டி கிராம மக்களுக்குமிடையே  கலந்துரையாடலும்  இடம்பெற்றது.

இக்  கலந்துரையாடலில் வலிக்கண்டி மக்கள் அண்மைக்காலமாக எதிர் நோக்கிவரும் பலவேறு அடிப்படை பிரச்சனைகள் மற்றும் கிராமத்தின் சிறுவர்களின் பொழுதுபோக்கு சார் எதிர்பார்ப்புக்கள் சம்மந்தமாக உரையாடப்பட்டது 

இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அகஸ்டின் கணைச்செல்வன்,  வலிகண்டி வெண்மதி சிறுவர்கள் கழக உறுப்பினர்கள், வலிக்கண்டி கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

வலி கண்டி கிராமத்தில் இடம்பெற்ற மரம் நடுகையும் ,கலந்துரையாடலும் யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை  வலிக்கண்டி கிராமத்தில் புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதிப் பங்களிப்புடன் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் வெண்மதி சிறுவர் கழகத்தின் வேண்டு கோளுக்கு இணங்க இன்று காலை 10 மணியளவில்   மர நடுகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இவ் நிகழ்வின் பின்னர் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வலிககண்டி கிராம மக்களுக்குமிடையே  கலந்துரையாடலும்  இடம்பெற்றது.இக்  கலந்துரையாடலில் வலிக்கண்டி மக்கள் அண்மைக்காலமாக எதிர் நோக்கிவரும் பலவேறு அடிப்படை பிரச்சனைகள் மற்றும் கிராமத்தின் சிறுவர்களின் பொழுதுபோக்கு சார் எதிர்பார்ப்புக்கள் சம்மந்தமாக உரையாடப்பட்டது இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அகஸ்டின் கணைச்செல்வன்,  வலிகண்டி வெண்மதி சிறுவர்கள் கழக உறுப்பினர்கள், வலிக்கண்டி கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement