• Apr 30 2026

டிட்வா புயலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். நாக விகாரையில் அஞ்சலி நிகழ்வு

Chithra / Dec 30th 2025, 12:41 pm
image

 

டிட்வா' புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளிலான அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண நாக விகாரையில் இன்று இடம்பெற்றது.


யாழ். மாவட்ட சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் டிட்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.


புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் அனர்த்தத்தின் போது படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூரண குணமடைந்து சுகவாழ்வு வாழ வேண்டியும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.


இதன்போது சர்வமதத் தலைவர்களும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையை மேற்கொண்டனர்.


டிட்வா புயலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். நாக விகாரையில் அஞ்சலி நிகழ்வு  டிட்வா' புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளிலான அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண நாக விகாரையில் இன்று இடம்பெற்றது.யாழ். மாவட்ட சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் டிட்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் அனர்த்தத்தின் போது படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூரண குணமடைந்து சுகவாழ்வு வாழ வேண்டியும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது சர்வமதத் தலைவர்களும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement