• May 15 2026

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் குகனின் 27ம் ஆண்டு நினைவு அஞ்சலி!

Ziya / May 15th 2026, 3:26 pm
image

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் இராஜரட்ணம் கிறிஸ்டி குககராஜா (குகன்) அவர்களின் 27ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.


இந்நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 


அவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும்  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகன் அவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.


இதன்போது மறைந்த குகனின்  விடுதலைப் பங்களிப்பு மற்றும் மாவட்ட ரீதியிலான மக்கள் பணிகள் இதன்போது நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் குகனின் 27ம் ஆண்டு நினைவு அஞ்சலி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் இராஜரட்ணம் கிறிஸ்டி குககராஜா (குகன்) அவர்களின் 27ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.இந்நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும்  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகன் அவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.இதன்போது மறைந்த குகனின்  விடுதலைப் பங்களிப்பு மற்றும் மாவட்ட ரீதியிலான மக்கள் பணிகள் இதன்போது நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement