• Sep 19 2024

திருகோணமலை சம்பவம்..!அரசியல் நடனம் ஆடவே முயற்சி- இதில் தலையிடத் தயார்.!

Sharmi / May 16th 2023, 11:40 am
image

Advertisement

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு பௌத்த மதத்தை காற்றப்போகிறோம் என கூறி சிலர் அரசியல் நடனம் ஆட முயற்சிப்பதாக முன்னிலை சோசலிச கட்சியின் ஊடக பேச்சாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே புபுது ஜயகொட இவ்வாறு தெரிவித்திருந்தார்.

திருகோணமலை சம்பவத்தை வைத்து இனவாதக் குழுக்களுக்கு அரசியல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது சம்பவத்தில் தலையிட்ட இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் தேவையென்றால், முன்னிலை சோசலிசக் கட்சி தலையிடத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் வீதியை மறித்தபோது பொலிஸார் உரிய முறையில் தலையிடாமல் மோதலுக்கான சூழலை உருவாக்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எங்களால் 'பௌத்த மதத்தை காப்பாற்ற முடியும்' என்று கூறி சிலர் அரசியல் நடனம் ஆட முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திருகோணமலை சம்பவம்.அரசியல் நடனம் ஆடவே முயற்சி- இதில் தலையிடத் தயார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு பௌத்த மதத்தை காற்றப்போகிறோம் என கூறி சிலர் அரசியல் நடனம் ஆட முயற்சிப்பதாக முன்னிலை சோசலிச கட்சியின் ஊடக பேச்சாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.நுகேகொடையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே புபுது ஜயகொட இவ்வாறு தெரிவித்திருந்தார்.திருகோணமலை சம்பவத்தை வைத்து இனவாதக் குழுக்களுக்கு அரசியல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது சம்பவத்தில் தலையிட்ட இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் தேவையென்றால், முன்னிலை சோசலிசக் கட்சி தலையிடத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் வீதியை மறித்தபோது பொலிஸார் உரிய முறையில் தலையிடாமல் மோதலுக்கான சூழலை உருவாக்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எங்களால் 'பௌத்த மதத்தை காப்பாற்ற முடியும்' என்று கூறி சிலர் அரசியல் நடனம் ஆட முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement