• May 23 2026

மீட்பு பணிகளை தொடரும் முப்படையினர் - இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

Chithra / Dec 4th 2025, 8:37 am
image


பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான மீட்பு பணிகளுக்காக முப்படையைச் சேர்ந்த 28,500 சிப்பாய்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  


இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இதனைத் தெரிவித்தார். 


சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 31,057 நபர்களை மீட்பதற்கு முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். 


இதேவேளை கொத்மலைப் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு இடம்பெயர்ந்த சுமார் 30 பேரை விமானப்படைப் படையினர் நேற்று வெற்றிகரமாக மீட்டுள்ளனர். 

 

இலக்கம் 06 படைப்பிரிவுக்குச் சொந்தமான MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்ட இந்தக் குழுவினர், இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

  

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விமானப்படை தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.


இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட தொலைத்தொடர்பு கட்டமைப்பில் தற்போது 75 சதவீதத்திற்கும் அதிகமானவை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


இதேவேளை அனர்த்த நிலைமையின் போது நாட்டிற்கு வருகை தந்த எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் தற்போது பிரவேசிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார்.


மீட்பு பணிகளை தொடரும் முப்படையினர் - இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல் பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான மீட்பு பணிகளுக்காக முப்படையைச் சேர்ந்த 28,500 சிப்பாய்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இதனைத் தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 31,057 நபர்களை மீட்பதற்கு முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். இதேவேளை கொத்மலைப் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு இடம்பெயர்ந்த சுமார் 30 பேரை விமானப்படைப் படையினர் நேற்று வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.  இலக்கம் 06 படைப்பிரிவுக்குச் சொந்தமான MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்ட இந்தக் குழுவினர், இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.   சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விமானப்படை தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட தொலைத்தொடர்பு கட்டமைப்பில் தற்போது 75 சதவீதத்திற்கும் அதிகமானவை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்த நிலைமையின் போது நாட்டிற்கு வருகை தந்த எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் தற்போது பிரவேசிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement