• Nov 22 2024

வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Tax
Chithra / Mar 10th 2024, 3:40 pm
image

 

சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதி வரை நிலுவைத் தொகை நிலுவையில் இருந்ததாகவும், எந்த நீடிப்பும் இல்லாமல் ஆறு மாதங்களில் நிலுவைத் தொகையை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில நிறுவனங்கள் பதிலளித்து தங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவதில் தவறிழைத்த நிறுவனங்கள் நிலுவைத் தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.


வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல். விடுக்கப்பட்ட எச்சரிக்கை  சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு இறுதி வரை நிலுவைத் தொகை நிலுவையில் இருந்ததாகவும், எந்த நீடிப்பும் இல்லாமல் ஆறு மாதங்களில் நிலுவைத் தொகையை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.சில நிறுவனங்கள் பதிலளித்து தங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.வரி செலுத்துவதில் தவறிழைத்த நிறுவனங்கள் நிலுவைத் தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.

Advertisement

Advertisement

Advertisement