• Nov 21 2024

சபாநாயகருக்கு சிக்கல்..! நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட எதிர்க்கட்சியினர்..!

Chithra / Feb 26th 2024, 1:11 pm
image


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில்  கையொப்பமிட்டுள்ளனர்.

பிரேரணையில் இன்று(26) கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

நிகழ்நிலை காப்பு சட்டம் சட்டவிரோதமான முறையிலயே இன்று சட்டமாக மாறியுள்ளது.

இந்த சட்ட வரைவு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்து, சபாநாயகர் தலைமையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர் கையெழுத்திட்டு, உயர் நீதிமன்றத்தின் உயர் சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் இதை நாட்டின் சட்டமாக்கியுள்ளார்.

இதன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


சபாநாயகருக்கு சிக்கல். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட எதிர்க்கட்சியினர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில்  கையொப்பமிட்டுள்ளனர்.பிரேரணையில் இன்று(26) கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,நிகழ்நிலை காப்பு சட்டம் சட்டவிரோதமான முறையிலயே இன்று சட்டமாக மாறியுள்ளது.இந்த சட்ட வரைவு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்து, சபாநாயகர் தலைமையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர் கையெழுத்திட்டு, உயர் நீதிமன்றத்தின் உயர் சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் இதை நாட்டின் சட்டமாக்கியுள்ளார்.இதன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement