• Nov 22 2024

திரிபோஷாவில் சிக்கல்..! குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிருக்கு ஆபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்

Chithra / Dec 27th 2023, 10:02 am
image

 

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தீர்மானத்தினால்  எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னிலை சோசலிஸ கட்சி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

திரிபோஷாவை பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் அதிகபட்சமாக இருக்கக்கூடிய அஃப்லாடோக்சின் அளவை 5ல் இருந்து 10 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

இந்த நடவடிக்கையால் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஒரு அமைச்சரவை பத்திரித்தை அனுப்பியுள்ளார்.

அதாவது குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும் திரிபோஷாவின் இராசாயனத்தின் அளவை இரட்டிப்பாக்கும் கட்டுப்பாட்டுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம், குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என புபுது ஜயகொட கூறியுள்ளார்.

திரிபோஷாவில் சிக்கல். குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிருக்கு ஆபத்து வெளியான அதிர்ச்சி தகவல்  குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தீர்மானத்தினால்  எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னிலை சோசலிஸ கட்சி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திரிபோஷாவை பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் அதிகபட்சமாக இருக்கக்கூடிய அஃப்லாடோக்சின் அளவை 5ல் இருந்து 10 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த நடவடிக்கையால் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஒரு அமைச்சரவை பத்திரித்தை அனுப்பியுள்ளார்.அதாவது குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும் திரிபோஷாவின் இராசாயனத்தின் அளவை இரட்டிப்பாக்கும் கட்டுப்பாட்டுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என புபுது ஜயகொட கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement