• Feb 13 2025

தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களை சந்தித்த கில்மிஷா..!

Chithra / Dec 27th 2023, 9:22 am
image

 

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியின் வெற்றியாளர் கில்மிஷா, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களை சந்தித்துள்ளார்.

சென்னை – காவாங்கரை பகுதியிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்ற கில்மிஷா, 

அங்குள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள ஈழத் தமிழர்கள், கில்மிஷாவிற்கு அமோக வரவேற்பளித்துள்ளனர்.

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்  இறுதிக் கட்டத்தில் ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.

இதில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா.

இந்நிலையில்  சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் கிராண்ட் பைனலில் வெற்றிக் கின்னத்தை  கில்மிஷா தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 

 


தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களை சந்தித்த கில்மிஷா.  தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியின் வெற்றியாளர் கில்மிஷா, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களை சந்தித்துள்ளார்.சென்னை – காவாங்கரை பகுதியிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்ற கில்மிஷா, அங்குள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள ஈழத் தமிழர்கள், கில்மிஷாவிற்கு அமோக வரவேற்பளித்துள்ளனர்.இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன்  இறுதிக் கட்டத்தில் ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.இதில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா.இந்நிலையில்  சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் கிராண்ட் பைனலில் வெற்றிக் கின்னத்தை  கில்மிஷா தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement