• Nov 26 2024

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசர கோாிக்கை!

Chithra / Jul 14th 2024, 4:00 pm
image

 

  

ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும், அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தொிவித்துள்ளாா்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

”ட்ரம்ப் மீதான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது.

இலங்கையிலும் தேர்தல் நெருங்கி வருவதால் எமது எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.

அத்துடன், கடந்த வாரம் நிதிக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

வீசா நடைமுறைகளில் முன்னெடுக்கப்பட்ட மாற்றங்களில் 140 நாடுகளில் தொழிற்பட்டு வரும் நிறுவனமான VFS எனும் நிறுவனத்தின் பெயரை முன்னிலைப்படுத்திக் கொண்டு வேறு கம்பனிகள் மூலம் இதை முன்கொண்டு செல்கின்றனர்.

இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபா வருமானம் இல்லாது போகிறது.

வீசா நடைமுறைகள் குறித்து கேட்டறிய நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது முதல் தடவையில் அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை.  இது ஓரு வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் நடவடிக்கையாக பார்க்க வேண்டும்.

அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களையும், நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும்.

அரச அனுமதி இல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல், கேள்வி மனு இல்லாமல் இந்த கம்பனிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது”  என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மேலும் தொிவித்துள்ளாா்.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசர கோாிக்கை    ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும், அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தொிவித்துள்ளாா்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.”ட்ரம்ப் மீதான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது.இலங்கையிலும் தேர்தல் நெருங்கி வருவதால் எமது எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.அத்துடன், கடந்த வாரம் நிதிக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வீசா நடைமுறைகளில் முன்னெடுக்கப்பட்ட மாற்றங்களில் 140 நாடுகளில் தொழிற்பட்டு வரும் நிறுவனமான VFS எனும் நிறுவனத்தின் பெயரை முன்னிலைப்படுத்திக் கொண்டு வேறு கம்பனிகள் மூலம் இதை முன்கொண்டு செல்கின்றனர்.இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபா வருமானம் இல்லாது போகிறது.வீசா நடைமுறைகள் குறித்து கேட்டறிய நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது முதல் தடவையில் அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை.  இது ஓரு வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் நடவடிக்கையாக பார்க்க வேண்டும்.அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களையும், நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும்.அரச அனுமதி இல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல், கேள்வி மனு இல்லாமல் இந்த கம்பனிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது”  என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மேலும் தொிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

Advertisement