• Nov 26 2024

உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்.. - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று ஹிருணிகா கருத்து..!!samugammedia

Tamil nila / Jan 17th 2024, 8:58 pm
image

"என் தந்தை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது" -  என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தீர்மானம் தன்னிச்சையானது என்று உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன், குறித்த தீர்மானம் சட்டத்துக்குப் புறம்பானது என்றும் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

"இது தனிமனித வெற்றியல்ல, முழு நாட்டின் வெற்றி, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்" - என்றும் அவர் குறிப்பிட்டார்.

"கோட்டாபயவின் முட்டாள்தனமான தீர்மானத்தை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டு" - என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்தார்.

உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும். - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று ஹிருணிகா கருத்து.samugammedia "என் தந்தை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது" -  என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தீர்மானம் தன்னிச்சையானது என்று உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன், குறித்த தீர்மானம் சட்டத்துக்குப் புறம்பானது என்றும் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்."இது தனிமனித வெற்றியல்ல, முழு நாட்டின் வெற்றி, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்" - என்றும் அவர் குறிப்பிட்டார்."கோட்டாபயவின் முட்டாள்தனமான தீர்மானத்தை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டு" - என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement