உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி என அழைக்கப்பட்ட சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ் சுனாமியில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூர்ந்தார்
இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்தவர்களை நினைவுகூர்ந்தார்.
சுனாமி அனர்த்ததின்போது ஒரு வயதான குழந்தையாக மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் கண்காணிப்பில் இருந்த இவர், 9 தாய்மாரினால் உரிமை கோரப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கையின் பின் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைக்குப் பிறகு அவரது தந்தை அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இவர் குறித்த வைத்தியசாலையில் 81ஆவது கட்டிலில் இருந்த காரணத்தினால் சுனாமி 81 என்ற அடையாளம் இவருக்கு சூட்டப்பட்டது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் க.பொ.த உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவித்தார்.
ஆழிப்பேரலையால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி.samugammedia உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி என அழைக்கப்பட்ட சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ் சுனாமியில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூர்ந்தார்இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்தவர்களை நினைவுகூர்ந்தார்.சுனாமி அனர்த்ததின்போது ஒரு வயதான குழந்தையாக மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் கண்காணிப்பில் இருந்த இவர், 9 தாய்மாரினால் உரிமை கோரப்பட்டார்.நீதிமன்ற நடவடிக்கையின் பின் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைக்குப் பிறகு அவரது தந்தை அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இவர் குறித்த வைத்தியசாலையில் 81ஆவது கட்டிலில் இருந்த காரணத்தினால் சுனாமி 81 என்ற அடையாளம் இவருக்கு சூட்டப்பட்டது.எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் க.பொ.த உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவித்தார்.