• Nov 07 2025

மீனவர்களின் வலையில் பிடிபட்ட சூரை மீன்கள்; சுமார் 1300 - 1500 வரை விற்பனை- அதிகரிக்கப்பட்ட வருமானம்!

shanuja / Oct 6th 2025, 7:46 pm
image

அம்பாறை கடற்பகுதிகளில் மீனவர்களின் வலையில் ஒருதொகை சூரை மீன்கள் பிடிபட்டுள்ளன. 


திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வகையான  பாரிய சூரை மீன்கள், வளையா மீன்கள்   என கரைவலைகள்  மூலம் பிடிக்கப்பட்டு  பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.


இன்றும்(06) இவ்வாறு காரைதீவு   மற்றும் நிந்தவூர்  பகுதிகளில் சூரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


சூரை  மீன் ஒன்றின்  பெறுமதி சுமார் 1300 ரூபா முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 


இவ்வாறு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதனால் ஒரு  மீனவரின்  நாள் வருமானம் வழமைக்கு மாறாக அதிகமாக கிடைக்கப்பெறுகின்றது என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 


தற்போது கல்முனை பிராந்திய  கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில்  என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மீனவர்களின் வலையில் பிடிபட்ட சூரை மீன்கள்; சுமார் 1300 - 1500 வரை விற்பனை- அதிகரிக்கப்பட்ட வருமானம் அம்பாறை கடற்பகுதிகளில் மீனவர்களின் வலையில் ஒருதொகை சூரை மீன்கள் பிடிபட்டுள்ளன. திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வகையான  பாரிய சூரை மீன்கள், வளையா மீன்கள்   என கரைவலைகள்  மூலம் பிடிக்கப்பட்டு  பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.இன்றும்(06) இவ்வாறு காரைதீவு   மற்றும் நிந்தவூர்  பகுதிகளில் சூரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.சூரை  மீன் ஒன்றின்  பெறுமதி சுமார் 1300 ரூபா முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதனால் ஒரு  மீனவரின்  நாள் வருமானம் வழமைக்கு மாறாக அதிகமாக கிடைக்கப்பெறுகின்றது என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தற்போது கல்முனை பிராந்திய  கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில்  என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement