• Nov 19 2024

கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிகளை நாயை விட்டு கடிக்க செய்த இருவர் கைது!

Chithra / Aug 20th 2024, 2:57 pm
image

 

மாவனெல்லை பகுதியில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற இரு பொலிஸ் அதிகாரிகளை நாயை தூண்டிவிட்டு கடிக்க செய்த குற்றசாட்டின் பேரில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

25 வயதுடைய ஆண் ஒருவரும் 23 வயதுடைய பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக மாவனெல்லை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இரு பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அந்த வீட்டிலிருந்தவர்கள் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரை கைது செய்ய விடாமல் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ள நிலையில் நாயை தூண்டிவிட்டு பொலிஸ் அதிகாரிகளை கடிக்க வைத்துள்ளனர்.

இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அந்த வீட்டில் இருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாய் கடித்ததில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வது தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிகளை நாயை விட்டு கடிக்க செய்த இருவர் கைது  மாவனெல்லை பகுதியில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற இரு பொலிஸ் அதிகாரிகளை நாயை தூண்டிவிட்டு கடிக்க செய்த குற்றசாட்டின் பேரில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 25 வயதுடைய ஆண் ஒருவரும் 23 வயதுடைய பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக மாவனெல்லை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இரு பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.அந்த வீட்டிலிருந்தவர்கள் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரை கைது செய்ய விடாமல் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ள நிலையில் நாயை தூண்டிவிட்டு பொலிஸ் அதிகாரிகளை கடிக்க வைத்துள்ளனர்.இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அந்த வீட்டில் இருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நாய் கடித்ததில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வது தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement