மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் 20 கிலோ மான் இறைச்சியை கடத்தி சென்ற இருவரை இன்று பகல் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பாலத்தில் சம்பவதினமான இன்று பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதன்போது கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்தை நோக்கி பிரயாணித்த சிறியரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது,
அதில் மறைத்து கடத்தி கொண்டு செல்லப்பட்ட 20 கிலோ மான் இறைச்சியை மீட்டதுடன் இருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை கைப்பற்றினர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் செங்கலடி பிள்ளையார் கோவிலைச் சோந்த 32 வயதுடையவர் மற்றும் பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர்கள் எனவும், இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் மான் இறைச்சியை கடத்திய இருவர் கைது மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் 20 கிலோ மான் இறைச்சியை கடத்தி சென்ற இருவரை இன்று பகல் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பாலத்தில் சம்பவதினமான இன்று பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.இதன்போது கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்தை நோக்கி பிரயாணித்த சிறியரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது,அதில் மறைத்து கடத்தி கொண்டு செல்லப்பட்ட 20 கிலோ மான் இறைச்சியை மீட்டதுடன் இருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை கைப்பற்றினர்.இதில் கைது செய்யப்பட்டவர்கள் செங்கலடி பிள்ளையார் கோவிலைச் சோந்த 32 வயதுடையவர் மற்றும் பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர்கள் எனவும், இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.