யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சாவகச்சேரி நகரசபை மைதான புனரமைப்பு தொடர்பாக ஆராய்ந்தார்.
அமைச்சருடன், சாவகச்சேரி நகர சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் களவிஜயமொன்றை இன்றையதினம் மேற்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய குறித்த விஜயத்தில் பங்கேற்றார்.
மண்டைதீவுக்கு விஜயம் செய்த குழுவினர் மைதானம் அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்தனர்.
சாவகச்சேரி நகரசபை மைதான புனரமைப்பு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆராய்வு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சாவகச்சேரி நகரசபை மைதான புனரமைப்பு தொடர்பாக ஆராய்ந்தார்.அமைச்சருடன், சாவகச்சேரி நகர சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இதேவேளை யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் களவிஜயமொன்றை இன்றையதினம் மேற்கொண்டனர்.இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய குறித்த விஜயத்தில் பங்கேற்றார்.மண்டைதீவுக்கு விஜயம் செய்த குழுவினர் மைதானம் அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்தனர்.