ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக ஏற்படவுள்ள தாக்கம் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதியால் நேற்றையதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதன்போது அமெரிக்காவில் புதிய இறக்குமதி வரிக் கொள்கைகளை மாற்ற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
அத்தோடு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து மேற்குறித்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்தக் கூட்டம் கூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சித் தலைவர்களின் கலந்துரையாடல். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக ஏற்படவுள்ள தாக்கம் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதியால் நேற்றையதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதன் பிரகாரம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.இதன்போது அமெரிக்காவில் புதிய இறக்குமதி வரிக் கொள்கைகளை மாற்ற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து மேற்குறித்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்தக் கூட்டம் கூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.