முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவரும் உடந்தையாக செயற்பட்ட மற்றொருவரும் என இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கீழ் இயங்கும் வடமாகாண குற்றத் தடுப்புப் பிரிவினால் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 32 வயதான ஒருவரிடம் இருந்து ஜஸ் போதைப்பொருள் 205 கிராமும் ஹெரோயின் 170 கிராமும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபருக்கு உதவியதாக மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.
கைதான இருவரையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்த வடமாகாண குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு விசுவமடுவில் போதைப் பொருள் குற்றச் சாட்டில் இருவர் கைது முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவரும் உடந்தையாக செயற்பட்ட மற்றொருவரும் என இருவர் கைதுசெய்யப்பட்டனர்.வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கீழ் இயங்கும் வடமாகாண குற்றத் தடுப்புப் பிரிவினால் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 32 வயதான ஒருவரிடம் இருந்து ஜஸ் போதைப்பொருள் 205 கிராமும் ஹெரோயின் 170 கிராமும் கைப்பற்றப்பட்டது.சந்தேக நபருக்கு உதவியதாக மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.கைதான இருவரையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்த வடமாகாண குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.