கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருவில பிரதான வீதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.
சேருவில பிரதான வீதியை அதிகாலை வேளையில் மூன்று எருமை மாடுகள் கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த லொறியுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் இரண்டு எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், படுகாயமடைந்த மற்றொரு கால்நடைக்கு கந்தளாய் கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், தப்பியோடிய லொறியைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து வருகின்றனர்.
கந்தளாய்-சேருவில பிரதான வீதியில் லொறி மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழப்பு. கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருவில பிரதான வீதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.சேருவில பிரதான வீதியை அதிகாலை வேளையில் மூன்று எருமை மாடுகள் கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த லொறியுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், படுகாயமடைந்த மற்றொரு கால்நடைக்கு கந்தளாய் கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், தப்பியோடிய லொறியைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து வருகின்றனர்.