மாத்தறை – தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 பேர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறைக்கும், மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கி பயணித்த இரண்டு பஸ்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரு பேருந்துகள் நேருக்கு நேர்மோதி கோர விபத்து 40க்கும் மேற்பட்டோர் காயம் மாத்தறை – தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 6 பேர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறைக்கும், மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கி பயணித்த இரண்டு பஸ்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.