• Nov 11 2024

கொழும்பில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Jul 15th 2024, 3:03 pm
image

  

தலங்கம - கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய  பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீகொட - புறக்கோட்டை மற்றும்  கடுவெல - கொள்ளுப்பிட்டி பயணிக்கும் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குளாகியது.

மீகொடயிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்து பத்தரமுல்லை தலாஹேனையை கடந்து பயணிக்கும் போது, 

​​கடுவெலயிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற பேருந்து  பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி   தலங்கம - கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய  பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.மீகொட - புறக்கோட்டை மற்றும்  கடுவெல - கொள்ளுப்பிட்டி பயணிக்கும் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குளாகியது.மீகொடயிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்து பத்தரமுல்லை தலாஹேனையை கடந்து பயணிக்கும் போது, ​​கடுவெலயிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற பேருந்து  பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement