• Jul 27 2025

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் பயணித்த காரில் ஆடு கடத்தல் - சிக்கிய இருவர்

Chithra / Jul 26th 2025, 1:20 pm
image


ஜனாதிபதியின் உருவப்படம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சின்னம் பதிக்கப்பட்ட காரில் இறைச்சிக்காக ஆடு ஒன்றைக் கொண்டு சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமாகப் பயணித்த காரை வழிமறித்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே இருவரும் குறித்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முன்னதாக, இதே போன்ற குற்றச்செயலுக்காக அவர்கள் குறித்த காரை பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதியின் உருவப்படத்துடன் பயணித்த காரில் ஆடு கடத்தல் - சிக்கிய இருவர் ஜனாதிபதியின் உருவப்படம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சின்னம் பதிக்கப்பட்ட காரில் இறைச்சிக்காக ஆடு ஒன்றைக் கொண்டு சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.சந்தேகத்துக்கு இடமாகப் பயணித்த காரை வழிமறித்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே இருவரும் குறித்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.முன்னதாக, இதே போன்ற குற்றச்செயலுக்காக அவர்கள் குறித்த காரை பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement